உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வில் 1,455 பேர் ஆப்சென்ட்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வில் 1,455 பேர் ஆப்சென்ட்

கிருஷ்ணகிரி: தமிழகம் முழுவதும் நேற்று டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 1' தேர்வு நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்தேர்வு, 13 மையங்களில் நடந்தது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, புனித அன்னாள் பெண்கள் மேல் நிலைப்பள்ளி தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் சரயு ஆய்வு செய்த பின் அவர் கூறுகையில், ''கிருஷ்ண-கிரி மாவட்டத்தில், 'குரூப் - 1' தேர்வுக்கு, 3,953 பேர் விண்ணப்-பத்த நிலையில், 2,498 பேர் தேர்வு எழுதினர், 1,455 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வை கண்காணிக்க, 13 முதன்மை கண்காணிப்பாளர்கள், 2 பறக்கும் படையினர், 4 நடமாடும் அலகு, 13 ஆய்வு அலுவலர்கள் மற்றும், 14 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் மின்-சாரம், குடிநீர், கழிப்பிடம், போக்குவரத்து, நடமாடும் மருத்துவக் குழுக்கள் வசதி மற்றும் போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்து வசதிகளும் தேர்வு மையங்களில் செய்யப்பட்டிருந்-தது,'' என்றார். கிருஷ்ணகிரி தாசில்தார் பொன்னாலா, தனி தாசில்தார் சின்னசாமி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலை-மையாசிரியர் மகேந்திரன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி