ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே சாரகப்பள்ளியை சேர்ந்தவர் திலிப்குமார், 28; தளி ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் ஆசிக், 25; இவர்கள் இருவர் மீதும், தளி போலீஸ் ஸ்டேஷனில் இரு கொலை வழக்குகள் உள்ளன. அதேபோல், தளி அருகே குனிக்கல் கிராமத்தை சேர்ந்த அண்ணன், தம்பிகளான கிரீஷ், 40, மஞ்சுநாத், 35, மீது கொலை முயற்சி உட்பட மேலும் சில வழக்குகள் உள்ளன. இவர்கள், 4 பேரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள், 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, மாவட்ட கலெக்டர் சரயுவிற்கு பரிந்துரைத்தார். அதன்படி, திலீப்குமார், ஆசிக், கிரீஷ், மஞ்சுநாத் ஆகிய, 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல், சேலம் மத்திய சிறையிலுள்ள அவர்களிடம் நேற்று வழங்கப்பட்டது.