உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குவாரியில் கொட்‍டப்பட்ட கழிவுகள் 5 டிராக்டர்களை சிறைபிடித்த மக்கள்

குவாரியில் கொட்‍டப்பட்ட கழிவுகள் 5 டிராக்டர்களை சிறைபிடித்த மக்கள்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஜெகதேவி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாப்பமுட்லு கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, 5 ஏக்கரில் செயல்பட்டு வந்த கல் குவாரி, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் உரிமம் ரத்தானதால் மூடப்பட்டது. இங்கு, கற்கள் வெட்டி எடுத்த பள்ளத்தில், சுற்று வட்டார பகுதிகளில் இயங்கும் கல் குவாரிகள் மற்றும் மா கூழ் நிறுவனங்களின் கழிவுகள் கொட்டப்பட்டன.இக்கழிவுகளில் உள்ள ரசாயனங்களால், நிலத்தடி நீர் பாதித்ததுடன், சுகாதார சீர்கேடால் உடல் உபாதை, குழந்தைகளுக்கு சரும நோய்கள் ஏற்பட்டன. அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில், நேற்று காலை கிரானைட் கழிவுகளோடு வந்த ஐந்து டிராக்டர்களை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பர்கூர் தாசில்தார் திருமுருகன் மற்றும் பர்கூர் போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர். இது குறித்து, ஜெகதேவி வி.ஏ.ஓ., ரமேஷ் புகாரின்படி, அந்த டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி