உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் 68.90 மி.மீ., மழை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரியில் 68.90 மி.மீ., மழை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 390 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று காலை, 408 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. நேற்று காலை, அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 33.46 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை ஆங்காங்கு மிதமான மழை பெய்தது.அதிகபட்சமாக தளியில், 15 மி.மீ., மழை பதிவானது. அதேபோல், ஓசூர், 12.10, சூளகிரி, 11, சின்னாறு அணை, 10, ராயக்கோட்டை, 7, கிருஷ்ணகிரி, 4.80, அஞ்செட்டி, 3.20, கே.ஆர்.பி., அணை, 2.60, தேன்கனிக்கோட்டை, 2, கெலவரப்பள்ளி அணை, 1.20 மி.மீ., என மொத்தம், 68.90 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை