உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானை முகாம்

குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானை முகாம்

குடியிருப்பு பகுதியில்ஒற்றை யானை முகாம்ஓசூர், ஆக. 22-தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனுார் காப்புக்காட்டில், 3 யானைகள் தனித்தனியாக முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைகள், நொகனுார், என்.கொத்துார், உச்சனப்பள்ளி ஆகிய கிராமங்களுக்கு சென்று, தக்காளி, முட்டைகோஸ், சாமந்தி, பீன்ஸ் போன்ற பயிர்களை நாசம் செய்தன. தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். நொகனுார் பகுதியில் ஒற்றை யானை குடியிருப்பு பகுதிகளை சுற்றி வந்ததால், மக்கள் அச்சமடைந்தனர். யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ