உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் கிடைக்க காங்., வேட்பாளரை ஆதரிக்க பிரசாரம்

தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் கிடைக்க காங்., வேட்பாளரை ஆதரிக்க பிரசாரம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும், காங்., வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், தொகுதி பொறுப்பாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் ஓட்டு கேட்டனர். பர்கூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒரப்பம், பாலிநாயனப்பள்ளி, அச்சமங்கலம், உள்ளிட்ட, 15 பஞ்., பகுதிகளில் நேற்று கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்களை வழங்கி, தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் பேசியதாவது:எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையோடு, தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. ஏழை எளியோர், மாணவர்கள், பெண்களுக்கான ஒவ்வொரு திட்டங்களையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்த்து பார்த்து செய்து வருகிறார். இத்திட்டங்கள் எல்லாம் அண்டை மாநிலங்களில் தேர்தல் அறிக்கைகளாக வந்த வண்ணம் உள்ளன. தற்போது அமைந்துள்ள, 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் பட்சத்தில், தமிழகத்தில் செயல்படும் இந்த திட்டங்கள், அனைத்தும் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும். இதற்கு, முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழும். அப்படிப்பட்ட தமிழகத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களை, தமிழக முதல்வர் பெற்றுத் தருவார். அந்த முன்னோடி திட்டங்களை பெற, கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில், நம் கூட்டணியில் போட்டியிடும், காங்., வேட்பாளர் கோபிநாத்தை பல லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.பர்கூர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், தமிழக, காங்., பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை