கிருஷ்ணகிரி: பொதுமக்கள் இருப்பிடத்திற்கே சென்று அதிகாரிகள் மனுக்-களை வாங்கும் வகையில் ஊரக பகுதிகளுக்கான 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த, 11ல், தர்மபுரியில் துவக்கி வைத்தார்.நேற்று, கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி பஞ்.,ல், 'மக்க-ளுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். பஞ்., தலைவர் காயத்ரி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்க-ளுக்கு சுகாதாரத்துறை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மனுக்கள் அளிக்க தகுதி வாய்ந்த, 15 துறை-களில், 11 துறைகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி, 335 மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக பட்டா மாற்றம், ஓ.ஏ.பி., கேட்டு, 221 மனுக்கள், ஊரக வளர்ச்சியில் 43, மின்துறையில், 34 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்-தனர்.கட்டிகானப்பள்ளி பஞ்., துணை தலைவர் செல்வி பாஸ்கர், பி.டி.ஓ.,க்கள் சிவப்பிரகாசம், செல்லக்கண்ணாள், பஞ்., செய-லாளர் ஜெயக்குமார், வார்டு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.* ஊத்தங்கரை ஒன்றியம் காட்டேரி, மூங்கிலேரி, கீழ்குப்பம், புதுார் புங்கனை ஆகிய, 4 பஞ்., மக்கள் பன்பெறும் வகையில், நேற்று மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கப்பட்டது.ஒன்றிய சேர்மன் உஷாராணி குமரேசன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார்.