| ADDED : ஆக 22, 2024 01:15 AM
பழங்குடியின குடியிருப்புகளைசீரமைக்க கலெக்டர் நடவடிக்கைகிருஷ்ணகிரி, பர்கூர் வட்டத்தில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு ஆய்வு செய்தார். காமாட்சிபுரம் இருளர் காலனி அரசு தொடக்கப்பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறன், கணித திறன், முதலமைச்சரின் காலை உணவு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், இருளர் குடியிருப்புகளுக்கு சென்றபோது, அங்கிருந்த பழங்குடியின் மக்கள், எங்கள் குடியிருப்பிலுள்ள, 50 வீடுகள் தற்போது சேதமடைந்துள்ளதால் அவற்றை பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ள கோரிக்கை வைத்தனர். இது குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.