உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கொத்தமல்லி விலை புதிய உச்சம் ஒரு கட்டு ரூ.90 வரை விற்பனை

கொத்தமல்லி விலை புதிய உச்சம் ஒரு கட்டு ரூ.90 வரை விற்பனை

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5,900 ஏக்கரில் கொத்தமல்லி சாகுபடி நடக்கிறது. குறிப்பாக, சூளகிரி, ஓசூர், தளி, கெலமங்கலம் வட்டாரத்தில் மட்டும், 5,700 ஏக்கருக்கு மேல் கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இதை மையமாக வைத்து சூளகிரியில் கொத்தமல்லி மார்க்கெட் இயங்குகிறது. இங்கிருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்திற்கு கொத்தமல்லி அனுப்பப்படுகிறது.தற்போது கொத்தமல்லி விலை உச்சத்தை அடைந்துள்ளது. ஓசூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ கொத்தமல்லி, 180 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு கட்டு கொத்தமல்லி, 60 ரூபாய் வரை விலை போனது. சூளகிரி கொத்தமல்லி மார்க்கெட்டில் அதிகப்பட்சமாக ஒரு கட்டு, 90 ரூபாய்க்கு விலை போனது. இந்த விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.விவசாயிகளிடம் கேட்டபோது, 'கடந்தாண்டு மே மாதம் இதே நாளில் ஒரு கட்டு கொத்தமல்லி, 20 ரூபாய்க்கும், ஒரு கிலோ, 90 ரூபாய் எனவும் விற்பனையானது. கோடை மழையால், கொத்தமல்லி தோட்டங்களில் தண்ணீர் தேங்கி செடி அழுகியது. அதனால் மார்க்கெட்டுகளுக்கு வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் விலை குறையலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை