உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., அரசை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: தி.மு.க., அரசை கண்டித்து, தே.மு.தி.க., சார்பில், தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது. அவைத்தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழக அரசால் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் ஆயில், பருப்பு மற்றும் கோதுமை வழங்கும் கார்டுதாரர்களுக்கு முறையாக பொருட்களை வழங்க வேண்டும். காவிரி நீர் பாசனத்தை திறக்க மறந்த தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம், என கோஷங்கள் எழுப்-பினர். நிர்வாகிகள் விஜய்வெங்கடேஷ், தங்கவேல், உதயகுமார், சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை