கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் வரும், 10 முதல், 3 நாட்கள் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடக்கிறது.இது குறித்து கல்லுாரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக் கல்லுாரியில் நடப்பாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை விபரங்கள், www.gacmenkrishnagiri.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்சி., (கணிதம், இயற்பியல். வேதியியல், கணினி அறிவியல், புள்ளியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு (கட்ஆப் மார்க் 250 மேல்) வரும் 10ல், கலந்தாய்வு நடக்கிறது. பி.காம்., பி.பி.ஏ.. பி.ஏ., (வரலாறு, பொருளியல்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு (கட்ஆப் மார்க் 250 மேல்) வரும், ஜூன் 11-ல், கலந்தாய்வு நடக்கிறது. பி.ஏ., (தமிழ்., பி.லிட்., - தமிழ், ஆங்கிலம்) ஆகிய பாடப் பிரிவுகளுக்கு (கட்ஆப் மார்க் 50 சதவீதத்திற்கு மேல்) ஜூன், 12ல் கலந்தாய்வு நடக்கிறது.தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற மாணவர்களின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வாயிலாக கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விபரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.கலந்தாய்வில் பங்குபெறும் மாணவர்கள், இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், மாற்றுச் சான்றிதழ் (அசல் இ.எம்.ஐ.எஸ்., எண்ணுடன்) மதிப்பெண் பட்டியல் (10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு அசல் சான்றிதழ்கள்), ஜாதி சான்றிதழ் (அசல்), வருமான சான்றிதழ், பாஸ்போர்ட் போட்டோ, -4, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல்பக்க நகல் ஆகியவை தவறாமல் எடுத்து வரவேண்டும். கலைப்பிரிவுக்கு 2,795 ரூபாய், அறிவியல் பிரிவிற்கு, 2,815 ரூபாய், கணினி அறிவியல் பிரிவிற்கு, 1,915 ரூபாய். சேர்க்கை கட்டணமாக செலுத்த வேண்டும். காலியிடங்களின் அடிப்படையிலேயே, மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.