உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கி.கிரி காங்., - எம்.பி.,யிடம் விவசாயிகள் கோரிக்கை மனு

கி.கிரி காங்., - எம்.பி.,யிடம் விவசாயிகள் கோரிக்கை மனு

ஓசூர்:விவசாய பொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதரவு விலை கொடுக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மின்சாரத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். டில்லியில் கடந்த, 2020 நவ., 26 முதல், 2021 டிச., 11 வரை, 384 நாட்கள் நடந்த போராட்டத்தின் போது உயிரிழந்த, 736 விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உட்பட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மீண்டும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.முன்னதாக, விவசாயிகளின் கோரிக்கைளை பார்லிமென்டில் பேச வலியுறுத்தி, கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத்திடம், இ.கம்யூ., தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் லகுமையா, ஐக்கிய விவசாயிகள் முன்னணி கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனி, மா.கம்யூ., தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் மாதையன் மற்றும் நிர்வாகிகள் இணைந்து, நேற்று மதியம் கோரிக்கை மனுவை வழங்கினர். அதை பெற்றுக்கொண்ட, எம்.பி., கோபிநாத், பார்லிமென்ட்டில் பேச நேரம் கிடைக்கும் போதெல்லாம், விவசாயிகளின் கோரிக்கைளை பேசி, பிரதமர் மோடி கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ