உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

கிருஷ்ணகிரி:பர்கூர் அருகே, மாரியம்மன் கோவில் கும்பாபி ேஷக விழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த தீர்த்தகிரிப்பட்டி கிராமத்தில், மாரியம்மன் கோவில் மஹா கும்பாபி ேஷக விழா கடந்த, 1ல் துவங்கியது. அன்று ஊர் பொதுமக்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து கணபதி பூஜை, கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், தீபாராதனை ஆகியவை நடந்தன. நேற்று காலை, சுவாமிக்கு பஞ்சகாவிய அபி ேஷகம், கோபுர கலசம் வைத்தல், சுவாமி பிரதிஷ்டை செய்தல், இரண்டாம் கால யாக பூஜை, கலச அலங்காரம், முதற்கால ஹோமம், திரவிய ஹோமம் ஆகியவை நடந்தன. பின்னர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபி ேஷகம் நடந்தது. பின், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். சுற்று வட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ