உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் பகுதியில் மிதமான மழை

ஓசூர் பகுதியில் மிதமான மழை

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரம் கோடை மழை பெய்தது. அதன் பின் மழை இல்லாததால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று காலை மற்றும் மதிய நேரங்களில் வழக்கம் போல் வெயில் வாட்டி எடுத்தது. மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் இரவு, 7:40 மணிக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியபடி இருந்ததால், மக்கள் வெப்ப தாக்கம் குறைந்து இதமான காலநிலையை உணர்ந்தனர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்