உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எடை குறைப்பு மையத்தில் அதிக கட்டணம்; அதிகாரி குழு சோதனை

எடை குறைப்பு மையத்தில் அதிக கட்டணம்; அதிகாரி குழு சோதனை

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் உள்ள உடல் எடை குறைப்பு மையத்தில், அதிகாரிகள் குழு சோதனை செய்தது.கிருஷ்ணகிரி, கோ ஆப்ரேட்டிவ் காலனியில் 'வெல்னஸ் சென்டர்' என்ற உடல் எடை குறைப்பு மையம் இயங்கி வருகிறது. இங்கு மருத்துவம் பயிலாமல், வாடிக்கையாளர்களுக்கு மருத்துவம் மற்றும் நீராகார மருந்தை கொடுப்பதாகவும், அதற்கு அதிகளவில் பணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இது குறித்து, பர்கூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் உமா மகேஸ்வரி, கிருஷ்ணகிரி டவுன் போலீஸ், கலெக்டருக்கு புகாரளித்தார்.இதையடுத்து மாவட்ட கலெக்டர் சரயு அறிவுறுத்தல்படி, நேற்று சுகாதாரத்துறை இணை இயக்குனர் தர்மர், மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் விஜயலட்சுமி, உமா மகேஸ்வரி மற்றும் மருத்துவ குழுவினர், வருவாய்துறையினர், உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள், போலீசார் உடல் எடை குறைப்பு மையத்தில் சோதனை மேற்கொண்டனர்.மேலும், 'இது குறித்து அனைத்து துறைகளுக்கும், விளக்கமளிக்க வேண்டும்' என கூறி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ