உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

பாப்பிரெட்டிப்பட்டி;தர்மபுரி மாவட்டம், கடத்துார் ஒன்றியம் சுங்கரஹள்ளி ஊராட்சியில் சுங்கரஹள்ளி, ஆதிதிராவிடர் காலனி, முல்லை நகர் வத்தல்மலை பால்சிலம்பு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் ஆதிதிராவிடர் காலனியில் ஒகேனக்கல் குடிநீர், ஆழ்துளை கிணற்று நீரை கடந்த, 15 நாட்களாக ஊராட்சி நிர்வாகம் வழங்கவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள், ஊராட்சி தலைவரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.நேற்று காலை அப்பகுதி மக்கள், பெண்கள் என, 50க்கும் மேற்பட்டோர், குடிநீர் வழங்கக்கோரி தர்மபுரி --- பாப்பிரெட்டிப்பட்டி ரோட்டில் சுங்கரஹள்ளியில், காலி குடங்களை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த கடத்துார் போலீசார், இது குறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறி, மறியலில் ஈடுபட்டவர்களிடம் உறுதியளித்தனர். அதன்படி பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ