கிருஷ்ணகிரி:கே.ஆர்.பி., அணையில் இருந்து, முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் முன், இடது மற்றும் வலதுபுற வாய்க்காலைசுத்தப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கில், ஓசூர்
கெலவரப்பள்ளி அணை மற்றும் கே.ஆர்.பி., அணை, நெடுங்கல்லில் ஒரு பெரிய
தடுப்பணை, மற்ற இடங்களில், 13 சிறிய தடுப்பணைகள் உள்ளன. 81 கி.மீ.,
துாரம் பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.,
அணை கடந்த, 1957ல், 52 அடி உயரத்தில், 5 சதுர மைல் பரப்பளவில்
கட்டப்பட்டது. அணையின் வலது புறம், 14.20 கி.மீ., நீளமும், இடது புறம்,
18.20 கி.மீ., நீளமும் கொண்ட, 2 பாசன வாய்க்கால் உள்ளது. இதில்,
வினாடிக்கு, 185 கன அடிநீர் கடத்தும் திறன் கொண்டதாக
கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி
பெறுகிறது.இரண்டு வாய்க்கால்களையும், 45 கி.மீ., தொலைவிற்கு
நீட்டிப்பு செய்துள்ளனர். ஆனால் அணையை கட்டி, 66 ஆண்டுகளை கடந்தும்,
பாசன பரப்பு, 4 மடங்கு அதிகரித்தும், இந்த, 2 வாய்க்கால்களையும், 300
கன அடிநீர் கடத்தும் அளவிற்கு அகலப்படுத்தி, ஆழப்படுத்த வேண்டும்
என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில்,
தற்போது அடுத்த மாதம் முதல்போக சாகுபடிக்கு வாய்க்கால்களில்
தண்ணீர் திறக்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக, வாய்க்கால்களில்
வளர்ந்துள்ள செடிகள், குப்பையை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என,
விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.