| ADDED : ஜூலை 14, 2024 02:10 AM
கிருஷ்ணகிரி: வட்டார, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்-பாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டுமென, மருந்தாளுனர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க, மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநிலத்த-லைவர் விஜயகுமரன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் ரவி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சண்முகம் வேலை அறிக்கையையும், மாநில பொருளாளர் ஹேம-லதா வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.மக்கள் நலவாழ்வு துறையில், 1,500க்கும் மேற்பட்ட மருந்தா-ளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிய வெப்ப நிலையிலும், தடுப்பூசிகளை பராம-ரித்து வைக்க, குளிர்பதன வசதியுடன் கூடிய மருந்து கிடங்கு-களை அமைக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம், பணி நியமனம் செய்யப்பட்ட மருந்தாளுனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 385 வட்டார, ஆரம்ப சுகாதார நிலையங்-களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஏற்கனவே பணியிலுள்ள மருந்தாளுனர்களுக்கு கூடுத-லாக, 3 கட்ட பதவி உதவி உயர்வு வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில செயலாளர் பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் ரவி, செந்தில், அசோக்குமார், சங்கர், மதுலிங்கம் முத்துக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.