உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் மாதிரி எடுக்கும் முறை விவசாயிகளுக்கு விளக்கம்

மண் மாதிரி எடுக்கும் முறை விவசாயிகளுக்கு விளக்கம்

கிருஷ்ணகிரி: மண் மாதிரி எடுக்கும் முறை குறித்து, விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனப்பள்ளியில், கோடை உழவு செய்வதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பர்கூர் வேளாண் உதவி இயக்குனர் சிவங்கரி தலைமை வகித்தார். அத்திமுகம் அதியமான் வேளாண் கல்லுாரி மாணவியர், 10 பேர் கொண்ட குழுவினர், விவசாயிகளுக்கு மண் மாதிரி எடுப்பதன் அவசியம் குறித்து, செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். அவர்கள் கூறுகையில், 'மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும் குறுக்கும், நெடுக்குமாக நடந்து, அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, நிறம், வேளாண் முறை, பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றார் போல, பல பகுதிகளாக பிரித்து, தனித்தனியாக மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண் மாதிரிகள் எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை கையினால், மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். பிறகு நிலத்தின் மேல்மட்ட பகுதியில் இருந்து ஒரு இஞ்ச் ஆழம் அல்லது, 2.5 செ.மீ., பருமனில் மாதிரி சேகரிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு ஹெக்டேரில், 10 முதல், 20 இடங்களில் மாதிரிகள் சேரிக்க வேண்டும். மண் மாதிரிகள் ஈரமாக இருந்தால், முதலில் அதை நிழலில் உலர்த்த வேண்டும். சேகரித்த மண் மாதிரியை, சுத்தமான ஒரு பாலித்தீன் பையில் போட்டு, அதன் மீது விபரங்களை குறிக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை