உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு, பாதிப்புகளை தடுக்கும் வகையில், முன்னேற்பாடுகள் தொடர்பான துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் சரயு தலைமை வகித்து, முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு, வேளாண் துறை இணை இயக்குனர் பச்சையப்பன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ