உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவ, மாணவியருக்கு மாலை அணிவித்து வரவேற்பு

மாணவ, மாணவியருக்கு மாலை அணிவித்து வரவேற்பு

ஓசூர்: ஓசூர் தேர்ப்பேட்டையில் சூடவாடி அரசு மாநகராட்சி துவக்கப்பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் புதிதாக, 90 மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி ராஜி, பார்வதி நாகராஜ் ஆகியோர், மாலை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். மேள, தாளங்கள் முழங்க மாணவ, மாணவியர் பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.தொடர்ந்து, வட்டார கல்வி அலுவலர் சதீஷ்குமார், தலைமையாசிரியர் பவுன்துரை ஆகியோர், ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, விலையில்லா நோட்டு, புத்தகங்களை வழங்கினர். மாணவ, மாணவியர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன. பள்ளி மேலாண்மை குழு தலைவி விமலா மற்றும் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், ஓசூர் காமராஜ் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி (தமிழ், ஆங்கில வழி), பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உட்பட, கல்வி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும், நேற்று மாணவ, மாணவியருக்கு விலையில்லா நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை