உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் தெப்பல் உற்சவம்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் தெப்பல் உற்சவம்

ஓசூர்:ஓசூரில், தேர் திருவிழாவையொட்டி தெப்பல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர் திருவிழா கடந்த, 19ல் திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 24ல் சுவாமி திருக்கல்யாணம், 25ல் தேரோட்டம், 26ல் பல்லக்கு உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு மேல், தேர்ப்பேட்டையிலுள்ள கோவில் தெப்பக்குளத்தில், தெப்பல் உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி தெப்பத்தில் வைக்கப்பட்டு, குளத்தை சுற்றி, 3 முறை சுற்றி வந்தனர். காங்., முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலர் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி தெப்பக்குளத்தில் விட்டனர். உப்பு, நவதானியங்களை குளத்தில் போட்டு வழிபட்டனர். தெப்பக்குளத்திற்குள் நடந்த உற்சவத்தை பார்க்க, ஏராளமான பக்தர்கள் திரண்டதால், பாதுகாப்புக்காக ஓசூர் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை