உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு தொழில்துறையினர் வரவேற்பு

மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு தொழில்துறையினர் வரவேற்பு

கிருஷ்ணகிரி;லோக்சபாவில் நேற்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். இந்த பட்ஜெட் குறித்து, பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.சிறப்பான பட்ஜெட்ஆர்.கொங்கரசன், 64, ஆடிட்டர், கிருஷ்ணகிரி: மத்திய பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. குறைகளை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் நடுத்தர, சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு உதவும் பல்வேறு அறிவிப்புகள், சலுகைகள் இடம்பெற்றுள்ளன. முத்ரா திட்டத்தில், 20 லட்சம் ரூபாய் கடன் என்பதே அதற்கு உதாரணம். நகர்ப்புறங்களில் வீடுகள் கட்டும் திட்டம் என, அனைத்து தரப்பினர் வளர்ச்சியுடன், வேளாண் துறைக்கு, 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, வருமான வரி உள்ளிட்டவைகளில் தளர்வு என, சிறப்பான பட்ஜெட்.தமிழகம் புறக்கணிப்புடி.சந்திரசேகரன், 88, செயலாளர், பஸ், ரயில் பயணிகள் சங்கம், வீரப்பநகர், கிருஷ்ணகிரி: பீஹார், ஆந்திராவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரிக்கு ரயில்வே ஸ்டேஷன் கோரி, 30 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதற்காக கையெழுத்து இயக்கம் நடத்தி, 2.50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று, மத்திய அரசுக்கு அனுப்பினோம். கடந்தாண்டு, கதி சக்தி துறை மூலம், கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேஷன் குறித்து திட்ட ஆய்வு பணிகள் நடந்த நிலையில், தற்போது அது குறித்த அறிவிப்பு வெளியாகாதது, ஏமாற்றத்தை அளிக்கிறது.தங்கம் வரி குறைப்புஎஸ்.ஆர்.ரவீந்தராசு, 48, ஒன்றிய செயலாளர், தமிழக விவசாயிகள் சங்கம், மத்துார்: தங்கத்தின் மீதான வரி குறைப்பின் மூலம் பவுனுக்கு, 2,080 ரூபாய் குறைக்கப் பட்டுள்ளது. இது நடுத்தர மக்களுக்கு மன ஆறுதல் அளிக்கிறது. நாட்டின் முதுகெலும்பான விவசாய வளர்ச்சிக்காகவும், விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில், எவ்வித நிதி அறிவிப்பும் இல்லை. தமிழக விவசாயிகள் மட்டும் அல்ல, நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளையும் வஞ்சிக்கும் விதமாகவும், ஏமாற்றும் விதமாகவும் உள்ளது.வரவேற்க தக்கதுகே.வேல்முருகன், 50, தலைவர், தொழில் வர்த்தக சபை, ஓசூர்: நலியும் சிறு, குறு தொழிற்சாலைகளை காப்பாற்ற கூடுதல் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. சிறு, குறுந்தொழிற்சாலைகள் பொருட்களை ஏற்றுமதி செய்ய, இ-காமர்ஸ் ஏற்றுமதி மையம் ஏற்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இவை வரவேற்கத்தக்கது. ஆனால், ஜி.எஸ்.டி., சமாதான திட்டம் கொண்டு வர வேண்டும். ஆட்டோமொபைல் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.,யை, 28ல் இருந்து, 18 சதவீதமாக குறைக்க வேண்டும்.விவசாயிகளுக்கு ஏமாற்றம்கே.எம்.ராமகவுண்டர், 64, மாநில தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்: விவசாயிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கான திட்டங்களை கூறுவது, கடன் திட்டங்களா, வளர்ச்சி பணிகளுக்கா என தெளிவு இல்லை. வேளாண் சார்ந்த, 5, 6 திட்டங்களில் நிதியை குறைத்துள்ளனர். விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தரும் பட்ஜெட்.முத்ரா கடன் தொகை உயர்வுஎஸ்.மூர்த்தி, 58, தலைவர், ஓசூர் சிறு, குறுந்தொழிற்சாலைகள் (ஹோஸ்டியா) சங்கம்: சிறு, குறுந்தொழிற்சாலைகளுக்கான கடன் உத்தரவாத திட்டத்திற்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முத்ரா கடன், 10 லட்சத்திலிருந்து, 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறு தொழில் வங்கியான சிட்பி அதிகளவில் உருவாக்கப்படும். 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிக்கு உதவித்தொகை வழங்கப்படும் போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம். மேலும், தொழிலாளர்களுக்கான வாடகை வீடு கட்டுவதற்கான திட்டம், டி.டி.எஸ்., தாமதமாக கட்டும் போது, அவர்கள் மேல் எவ்வித குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படாது போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கது.எதிர்பார்த்தது இல்லைகே.மகேஷ், 50, தலைவர், கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் உற்பத்தியாளர்கள் சங்கம், கிருஷ்ணகிரி:மத்திய பட்ஜெட்டில் வருமான வரியில், தனி நபர் வருமானம், 2.50 லட்சம் ரூபாயிலிருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முத்ரா வங்கி கடன் தொகை, 10- லட்சத்தில் இருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வங்கி கடன்களை, 90 நாட்கள் வரை கட்ட முடியாதவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். சிறு, குறு தொழில்களுகளுக்கு கடன் வட்டி விகிதம், விற்பனை வரி குறைப்பு இருக்கும் என எதிர்பார்த்தோம். கிரானைட் தொழிலுக்கு எந்த சலுகைகளும் இல்லை. எதிர்ப்பார்ப்புகள் எதையும் பூர்த்தி செய்யாத பட்ஜெட்.போதிய நிதி இல்லைஜெ.பிரதாபன், 55, மாநில செயலாளர், விவசாய தொழிலாளர் சங்கம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு, 86,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கு போதுமான நிதி இல்லை. இது, 2.69 கோடி குடும்பங்களுக்கு தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 10 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.உரிய விலை உறுதி வேண்டும்எஸ்.ஏ.சின்னசாமி, 77, மாநில தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்: வேளாண்மைக்கு, 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியது வரவேற்க தக்கது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உறுதி செய்ய வேண்டும். விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தால், சாகுபடி குறைந்தாலும் அவர்களுக்கு இழப்பீடு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி