ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த சாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ், 28. இவரது தாய் சரோஜம்மா, உறவினர்கள் மல்லேஷ், உமாபதி, லோகேஷ் ஆகியோரும், அதே பகுதியை சேர்ந்த முருகேசன், மாதேவண்ணா, ரமேஷ் தரப்பினரும் உறவினர்கள் ஆவர்; இவர்களுக்குள் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த, 15 மதியம் ராஜேஷின் தாய் சரோஜம்மா, உறவினர் மல்லேஷ் ஆகியோர், பிரச்னைக்குரிய நிலத்தில் உழுது கொண்டிருந்தனர். இதற்கு முருகேசன், மாதேவண்ணா, ரமேஷ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தகராறு ஏற்பட்டது. இதில் சரோஜம்மா, மல்லேஷ், உமாபதி, லோகேஷ் ஆகிய, 4 பேரை, முருகேசன் தரப்பினர் இரும்பு கம்பியால் தாக்கி, பொலிரோ காரை சேதப்படுத்தினர்.காயமடைந்த நான்கு பேரும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டனர். ராஜேஷ் கொடுத்த புகார்படி, மாதேவண்ணா, 45, என்பவரை தளி போலீசார் கைது செய்தனர். முருகேசன், ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல், முருகேசன் தன்னை தாக்கியதாக கொடுத்த புகார்படி, ராஜேஷ், சரோஜம்மா, மல்லேஷ், உமாபதி, லோகேஷ் ஆகிய, 5 பேர் மீது தளி போலீசார் வழக்குப்பதிந்து, ராஜே ைஷ கைது செய்தனர்.