ஆம்னி பஸ் மோதி தொழிலாளி பலி
ஆம்னி பஸ் மோதி தொழிலாளி பலிகிருஷ்ணகிரி, ஆ பர்கூர் அடுத்த கீழ்பூங்குருத்தியை சேர்ந்தவர் அன்பு, 30, சமையல் தொழிலாளி; இவர் கடந்த, 26 மாலை சங்கர், 30, முரளி, 32 ஆகிய மூவருடன் யமஹா கிரக்ஸ் பைக்கில் சென்றுள்ளார். அந்தேரிப்பட்டி அருகே ஊத்தங்கரை - கிருஷ்ணகிரி சாலையில் சென்றபோது அவ்வழியாக வந்த ஆம்னி பஸ் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அன்பு இறந்தார். சங்கர், முரளி ஆகிய இருவரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.