உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 118 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

118 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலை-மையில், துப்புரவு அலுவலர்கள், ஆய்வாளர்கள், மேற்பார்வையா-ளர்கள் அடங்கிய குழவினர், நாமல்பேட்டை, ஜெனப்பர் தெரு ஆகிய பகுதிகளிலுள்ள கடைகளில், நேற்று திடீர் ஆய்வு செய்-தனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்ப-டுத்தும் பிளாஸ்டிக் கவர்கள், டீ கப்புகள் விற்பனைக்காக வைக்-கப்பட்டிருந்தன. மொத்தம், 118 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த மாநகராட்சி ஊழியர்கள், 1.18 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.இனிவரும் காலங்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்றும், மீறி விற்றால் கடைகளுக்கு வழங்கப்பட்ட தொழில் உரிமம் ரத்து செய்யப்-படும் என்றும் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்-பட்டது. பறிமுதலான பிளாஸ்டிக் பொருட்கள், ஏ.எஸ்.டி.சி., ஹட்-கோவில் உள்ள மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பேக் செய்து, மறு சுழற்சிக்கு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படவுள்-ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ