கல்லுாரி மாணவி உட்பட 2 இளம்பெண்கள் மாயம்
கல்லுாரி மாணவி உட்பட2 இளம்பெண்கள் மாயம்கிருஷ்ணகிரி, டிச. 2-பர்கூர் அருகே கொங்கன்செரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 41. மளிகை கடை வைத்துள்ளார். இவர் மனைவி ரவேத்தா, 25. இவர் கடந்த மாதம், 28 காலை, 9:30 மணிக்கு, வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ரவேத்தா, அதே பகுதியிலுள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்த சுதாகர், 30, என்பவருடன் அடிக்கடி மொபைல் போனில் பேசியது தெரிந்தது. மனைவியை மீட்டு, சுதாகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுரேஷ், போலீசில் புகார் அளித்துள்ளார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.* குருபரப்பள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர், 19, வயது கல்லுாரி மாணவி. இவர் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த, 29 காலை, வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில், ஒரு வாலிபருடன் காதலித்தது தெரிந்தது. அந்த வாலிபரிடமிருந்து மகளை மீட்டுத்தர, அவரது பெற்றோர் புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.