மேலும் செய்திகள்
குழந்தை கழுத்தில் கிடந்த நகையை திருடிய பெண் கைது
28-Dec-2025
மண் கடத்திய லாரி பறிமுதல் கிருஷ்ணகிரி:
28-Dec-2025
சாலை பணிக்கு பூமி பூஜை
28-Dec-2025
கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
28-Dec-2025
ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெ-டுப்பு மேற்கொள்ளப்பட்டு, 200 பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்-டத்தில், 2025 - 26ம் ஆண்டிற்கான ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி, நேற்று முன்தினம் நேற்று என இரு நாட்கள் நடந்தன.மாவட்டத்தில் உள்ள ஈர நிலங்களான ராமநா-யக்கன் ஏரி, பாரூர் ஏரி, அக்கா, தங்கை ஏரி, தளி ஏரி, கே.ஆர்.பி., அணை, கெலவரப்பள்ளி அணை, பனை ஏரி, காவிரி ஆறு உட்பட மொத்தம், 25 நீர்-நிலைகளில் காலை, 6 முதல், 11:00 மணி வரை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டன. 100க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள், வனப்ப-ணியாளர்கள், தன்னார்வலர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் இப்பணியில் ஈடுபட்டனர். ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் மேற்பார்வையில், வாட்-ஸாப்பில் குழுக்கள் உருவாக்கப்பட்டு வழி நடத்-தப்பட்டது.தொலைநோக்கு கருவி, கேமரா உள்ளிட்ட-வற்றை பயன்படுத்தி, கருநாரை, வெண்கழுத்து நாரை, கொண்டை பாம்புண்ணி கழுகு, சிறிய கரும் பருந்து, கொண்டை வல்லுாறு, சிறிய பச்சை கொக்கு, சிறிய காட்டு ஆந்தை, நத்தை குத்தி நாரை, செந்நாரை, மீன்கொத்திகள் மற்றும் மஞ்சள் மூக்கு நாரை உட்பட மொத்தம், 200க்கும் மேற்பட்ட பறவையினங்கள் அடை-யாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டன. கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு, வனத்துறை மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025