உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆர்.டி.ஓ., ஆபீசில் சிக்கிய ரூ.2.46 லட்சம்

ஆர்.டி.ஓ., ஆபீசில் சிக்கிய ரூ.2.46 லட்சம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப்பதிவு மற்றும் உரிமம் பெறுவது உள்ளிட்ட பணிகளுக்கு, லஞ்சம் வாங்குவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று மதியம், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., கிருஷ்ணராஜன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை செய்தனர். இதில், 2.46 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், இடைத்தரகர்கள் அண்ணாமலை, பழனி, சென்றாயன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை