உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காதலர் தினத்திற்கு 50 லட்சம் ரோஜாக்கள் ஓசூரில் இருந்து ஏற்றுமதியாவதில் சிக்கல்

காதலர் தினத்திற்கு 50 லட்சம் ரோஜாக்கள் ஓசூரில் இருந்து ஏற்றுமதியாவதில் சிக்கல்

ஓசூர்:ஓசூரிலிருந்து வெளிநாடுகளுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு, 50 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதியாகும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், ஆப்பிரிக்க மலர்கள் போட்டியால், நினைத்த அளவிற்கு ஏற்றுமதியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரத்தில், 2,500 ஏக்கருக்கு மேல் பசுமை குடில்கள் அமைத்து, ரோஜா சாகுபடி நடக்கிறது. குறிப்பாக, தாஜ்மகால், பர்ஸ்ட் ரெட், அவலாஞ்சி, நோப்லஸ், கார்வெட், கோல்ட் ஸ்டிரைக் போன்ற ரோஜாக்கள் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. ஆண்டுதோறும் காதலர் தினத்தை முன்னிட்டு, வெளிநாடுகளுக்கு அதிகளவில், பூக்கள் ஏற்றுமதியாகும். நடப்பாண்டு காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில், வெளிநாட்டு ஆர்டர்கள் பெறப்பட்டு, கடந்த, 2 முதல் விவசாயிகள் ஏற்றுமதியை துவங்கி உள்ளனர். ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், வங்காளதேசம், பூட்டான், நேபாளம் போன்ற நாடுகளுக்கு, ரோஜா பூ ஏற்றுமதியாகிறது.ஒரு ரோஜா குறைப்பட்சம், 14 முதல், 18 ரூபாய் வரை விற்பனையாகிறது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடப்பாண்டு, 40 முதல், 50 லட்சம் ரோஜாக்கள் காதலர் தினத்திற்கு ஏற்றுமதியாகும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.இது குறித்து, ரோஜா விவசாயிகள் கூறியதாவது:ஆப்பிரிக்க நாடுகளின் ரோஜா பூ விலை குறைவாகவும், புதிய ரகங்களும் வெளிநாட்டு சந்தைகளுக்கு வருகிறது. அதனால், ஓசூரிலிருந்து, 50 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதியாகுமா என்ற சந்தேகம் உள்ளது. இருந்தாலும், ஆப்பிரிக்க நாடுகளுடன் போட்டியிட்டு, ரோஜாக்களை அனுப்பி வருகிறோம். வரும், 10 வரை ஏற்றுமதி நடக்கும். விமான கட்டணம் அதிகமாக உள்ளது. அதை, 25 சதவீதம் குறைக்க கேட்டுள்ளோம். அதை செய்தால், கூடுதல் ரோஜாக்களை அனுப்ப ஏதுவாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி