உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பொக்லைனால் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்

பொக்லைனால் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்

பர்கூர் : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், காரக்குப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம், 35 லட்சம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை தொட்டி உள்ளது. அதில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பர்கூர் ஒன்றிய பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. நேற்று காலை, ராமசாமி நகர் அருகே பர்கூர் - எமக்கல்நத்தம் சாலையில், கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் மோதியது. இதனால், 10 அடி உயரத்துக்கு தண்ணீர் பீறிட்டு, அப்பகுதி முழுதும் தண்ணீர் தேங்கி, பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது. இதனால் உடைத்த குடிநீர் குழாயை, உடனே சரிசெய்ய, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ