உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த ஏணிபெண்டா பகுதியை சேர்ந்தவர் அருண், 24, கொத்தனார்; இவருக்கு, 3 வயதில் தர்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் காலை, வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த குழந்தை, தரைமட்ட தண்ணீர் தொட்டி திறந்திருந்ததால், அதில் தவறி விழுந்தது. குழந்தையை காணாமல் தேடிய பெற்றோர், தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது, குழந்தை தொட்டிக்குள் இருந்தது. உடனடியாக குழந்தையை மீட்ட பெற்றோர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை