உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நகரில் புகுந்த யானை உயிர் தப்பிய தம்பதி

நகரில் புகுந்த யானை உயிர் தப்பிய தம்பதி

தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரக பகுதியில் ஏராளமான யானைகள் முகாமிட்டுள்ளன. இதில், கிரி என்ற வயது முதிர்ந்த ஒற்றை யானை, நேற்று முன்தினம் இரவு ஜார்க்கலட்டி பகுதியில் சுற்றித்திரிந்தது.பின் நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு டி.ஜி., தொட்டி வழியாக வந்தது. அங்கிருந்து சென்ற யானை, அஞ்செட்டி சாலையில் உள்ள தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புகுந்தது.பள்ளியை ஒட்டி சாலையோரம் செம்பன், அவரது மனைவி லட்சுமி கடை முன் யானை நின்றது. சத்தம் கேட்டு எழுந்த செம்பன், தன் மனைவியுடன் உடனடியாக வெளியேறி உயிர் தப்பினார். கூடாரத்தில் இருந்த கண்ணாடி பெட்டியை யானை உடைத்தது.தேன்கனிக்கோட்டை வனச்சரகர் விஜயன் மற்றும் வனத்துறையினர், யானையை வனப்பகுதி நோக்கி விரட்டினர். அப்போது அர்த்தகூர் ஏரிக்கு சென்ற யானை, அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ