உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை பொருட்களை பைக்கில் கடத்தியவர் கைது

புகையிலை பொருட்களை பைக்கில் கடத்தியவர் கைது

புகையிலை பொருட்களைபைக்கில் கடத்தியவர் கைதுஓசூர், அக். 17-கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பூனப்பள்ளி சோதனைச்சாவடியில் வாகன சோதனை செய்த மத்திகிரி போலீசார், அவ்வழியாக வந்த ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது, கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வருவது தெரிந்தது. இதனால் பைக்கை ஓட்டி வந்த, ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளியை சேர்ந்த டிரைவர் ராஜப்பா, 56, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, பைக் மற்றும் 10,000 ரூபாய் மதிப்புள்ள, 12 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.சிங்காரப்பேட்டை அருகே மகனுார்பட்டி பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற தேவா, 60 என்பவரை, அப்பகுதி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ