உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த செயல் விளக்கம்

காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த செயல் விளக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரியில், பனைம-ரத்தை சேதப்படுத்தும் காண்டாமிருக வண்டு-களை கட்டுப்படுத்துவது குறித்து, அதியமான் வேளாண் கல்லூரி மாணவியர், விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர். முதல்வர் சாந்தி முன்னிலையில், வேளாண் இளம் அறிவியல் நான்காம் ஆண்டு மாணவியர், பனைமரத்தில் துளையிட்டு சேதப்படுத்தும் காண்டமிருக வண்டுகளை கட்டுப்படுத்துவது குறித்து கூறுகையில், 'வேப்பங்கொட்டை புண்ணாக்குடன் மணல் கலவை (1:2 விகிதம்) குறுத்துப் பகுதியில் இடலாம். ஆமணக்கு புண்ணாக்கு கரைசல் பொறிகளை வைக்கலாம். தொழுவரகு வயலை தவிர்க்க வேண்டும். நப்தலின் உருண்டைகள் மூலமும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்ப-டுத்தலாம்,' என்றனர். மேலும் இது குறித்து செயல் விளக்கம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை