உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., இளைஞரணியினர் ஒன்று திரண்டு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுகோள்

தி.மு.க., இளைஞரணியினர் ஒன்று திரண்டு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுகோள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பெங்களூரு சாலையிலுள்ள, தி.மு.க., கிழக்கு மாவட்ட இளைஞரணி அலுவலகத்தில், நேற்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது. மாவட்ட அமைப்பாளர் தினேஷ்ராஜன் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர்கள், மகேந்திரன், சங்கர், சரவணன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஹிந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மத போதகர்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலிட்டனர்.இதில், 500 ஏழை எளியோரின் குடும்பத்தினருக்கு, மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகத்தை வழங்கிய, கிழக்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன் பேசுகையில், ''சமூகத்தில் உள்ள ஏற்ற, இறக்கங்களை மாற்ற, தி.மு.க., 74 ஆண்டுகளாக போராடி வருகிறது. சமூக நீதியை சீர்துாக்கி நிறுத்த, தி.மு.க., இளைஞரணி மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி, களம் இறங்கியுள்ளார். அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில் வரும், 21ல் நடக்கும் சேலம் இளைஞரணி மாநில மாநாட்டில், இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், அறிஞர், வக்கீல் குமரவேல், இளைஞரணி நிர்வாகிகள் உள்பட, பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ