உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குழந்தை திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

குழந்தை திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், சமூக நலத்துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைக-ளுக்கு கற்பிப்போம் திட்டத்தில், குழந்தை திருமணங்களை தடுப்-பதற்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை, சி.இ.ஓ., (பொ) முனிராஜ் துவக்கி வைத்தார். 18 வயது மற்றும், 18 வய-திற்கு மேற்பட்ட பெண்கள் என, 2 பிரிவுகளில், 5 கி.மீ., தொலைவு ஓடும் வகையில் நடந்த போட்டியில், 400 மாணவியர் பங்கேற்றனர். 18 வயதினருக்கான போட்டியில் வித்யாஸ்ரீ முதலிடமும், மோனி-காஸ்ரீ, 2ம் இடமும், தாமரை செல்வி, 3ம் இடமும் வென்றனர்.அதே போல், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில், சரிதா முதலிடமும், சரண்யா, 2ம் இடமும், நிகா, 3ம் இடமும் வெற்றனர். இவர்களுக்கு முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாய் என பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆர்.டி.ஓ., ஷாஜகான் வழங்கினார்.முன்னதாக, குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாணவியர், அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வ-லர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.இதில், ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் சக்தி சுபாஷினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சரவணன், டி.எஸ்.பி., முரளி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜ-கோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை