உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளி மாணவர்களுக்காக ரூ.22.90 லட்சத்தில் பெஞ்ச், டெஸ்க்

அரசு பள்ளி மாணவர்களுக்காக ரூ.22.90 லட்சத்தில் பெஞ்ச், டெஸ்க்

கிருஷ்ணகிரி: அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியருக்கு, 22.90 லட்சம் ரூபாய் மதிப்பில் பெஞ்ச், டெஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டசபை தொகுதிக்கு உட்-பட்ட, அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் அமர்வ-தற்கு போதிய பெஞ்ச், டெஸ்க் இல்லை என கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான மதியழகனிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு, சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 22.90 லட்சம் ரூபாய் மதிப்பில் பெஞ்ச், டெஸ்க் வழங்கும் நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி சிப்காட் வளா-கத்தில் நடந்தது. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான பெஞ்ச், டெஸ்குகளை வழங்கி மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார். தி.மு.க., பொதுக்குழு உறுப்-பினர் அஸ்லம், ஒன்றிய செயலாளர்கள் சாந்தமூர்த்தி, ராஜேந்-திரன், அறிஞர், தேங்காய் சுப்பிரமணி, மாவட்ட மகளிரணி தலைவி லட்சுமி பிரியா, இளைஞரணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை