உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆஷாடா மாதம் பிறப்பு: ஓசூரில் பூ மார்க்கெட் வெறிச்

ஆஷாடா மாதம் பிறப்பு: ஓசூரில் பூ மார்க்கெட் வெறிச்

ஓசூர் : தெலுங்கு, கன்னட மக்களுக்கு ஆடி மாதம் பிறந்துள்ளதால், ஓசூர் பூ மார்க்கெட்டுகளில் பூக்கள் வாங்க, மக்கள் ஆர்வம் காட்டவில்லை.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள இரு பூ மார்க்கெட்டுகளில் தினமும், 300 டன்னுக்கு மேல் பூக்கள் விற்பனைக்கு வரும். இங்கு கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, பூக்கள் விலை இறங்குமுகமாக உள்ளது. தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அதிகளவில் உள்ள ஓசூரில், கடந்த, 5 ல் 'ஆஷாடா' என்ற ஆடி மாதம் துவங்கியது. இம்மாதத்தில் அவர்கள், எந்த சுப நிகழ்ச்சிகளும் செய்ய மாட்டார்கள். அதனால், ஓசூர் பூ மார்க்கெட்டுகளில் மக்கள் வருகையின்றி, விலையும் குறைந்துள்ளது.கடந்த வாரம், 300க்கு விற்ற ஒரு கிலோ சாமந்தி, நேற்று, 200 ரூபாய்க்கும், 60 க்கு விற்ற செண்டுமல்லி, 25க்கும், 120 க்கு விற்ற பட்டன் ரோஜா, 40க்கும், 400 க்கு விற்ற மல்லி, 300 க்கும், 600 க்கு விற்ற கனகாம்பரம், 300 க்கும், 400 க்கு விற்ற முல்லை, 300 க்கும், 100க்கு விற்ற பன்னீர் இலை, 40 ரூபாய்க்கும் நேற்று விற்றது. அடுத்து வரும் அமாவாசை நாள் வரை, 'ஆஷாடா' மாதம் என்பதால், அதுவரை பூ விலை குறைவாகத்தான் இருக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ