மேலும் செய்திகள்
எருது விடும் விழா மூவர் மீது வழக்கு
27-Jun-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டியில், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. எருதுவிடும் விழா நடத்திய திருப்பதி, 60 மற்றும் 3 பேர் மீது கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.அதேபோல குருபரப்பள்ளி அருகே கொல்லப்பள்ளி, மகராஜகடை, எம்.சி.பள்ளி பகுதிகளில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழாக்கள் நடத்தியதாக கொல்லப்பள்ளி செல்வராஜ், 55 மற்றும் 7 பேர் மீது குருபரப்பள்ளி போலீசாரும், எம்.சி.பள்ளி அம்மாசன், 55 மற்றும் 2 பேர் மீது மகாராஜகடை போலீசாரும் வழக்கு பதிந்தனர்.
27-Jun-2025