மேலும் செய்திகள்
சுற்றுலா பயணிக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
15-Aug-2025
பர்கூர்: கார் கவிழ்ந்த விபத்தில், சென்னை இன்ஜினியர் பலியானார். அவரது நண்பர்கள், 6 பேர் படுகாயமடைந்தனர். சென்னை, திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் ஐவான் பால், 26; இன்ஜினியர். இவருடன் கல்லுாரியில் படித்த நண்பரின் திருமணம், தர்மபுரியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்க ஐவான்பால், கல்லுாரி நண்பர்கள், ஆறு பேருடன், 'ரெனால்ட் லாட்ஜ்' காரில் தர்மபுரி வந்தார். நண்பரின் திருமணத்தை முடித்து விட்டு, அன்றிரவு சென்னை திரும்பினர். காரை ஐவான்பால் ஓட்டினார். நள்ளிரவு, 12:30 மணியளவில், ஒரப்பம் அருகே கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்த போது, அங்கு உயர்மட்ட மேம்பால கட்டுமான பணி நடப்பதால், வாகனங்கள் அணுகு சாலையில் திருப்பி விடப்பட்டிருந்தன. அதை அறியாமல் வேகமாக சென்றதால், கட்டுப்பாட்டை இழந்த கார், பாலப்பணிகள் நடந்து வரும் பகுதிக்கு சென்று, மண் குவியலில் மோதி, கவிழ்ந்தது. இதில், ஐவான்பால், அவரது நண்பர்களான சென்னை, திருநின்றவூர் பிரவீன், 25, திருத்தணி பள்ளிப்பட்டு கதிர், 25, வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா காமேஷ், 25, சென்னை அத்திப்பட்டு ஹேமந்த், 25, அரக்கோணம் மோகன், 25, சென்னை, அம்பத்துார் சர்மராஸ், 25 ஆகிய, 7 பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் ஐவான் பால் உயிரிழந்தார். மற்ற, ஆறு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Aug-2025