ஓசூர்: ஓசூர் அருகே, கன்டெய்னர் லாரி தீப்பிடித்ததில், அதற்குள் இருந்த, 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொபட்டுகள் எரிந்து நாச-மாகின.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி அருகே லாலிக்கல் பகுதியில், டி.வி.எஸ்., நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கிருந்து டி.வி.எஸ்., ஜூப்பிட்டர் உள்-ளிட்ட மொபட்டுகளை ஏற்றிய கன்டெய்னர் லாரி, ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளியில் உள்ள டி.வி.எஸ்., நிறுவனத்திற்கு நேற்று மதியம், 1:30 மணிக்கு புறப்பட்டது. உத்தரபிரதேச மாநி-லத்தை சேர்ந்த ராம்நரேஷ், 45, என்பவர் லாரியை ஓட்டிச் சென்றார். உத்தனப்பள்ளி - கெலமங்கலம் சாலையில், போடிச்சிப்பள்ளி பகுதியில் லாரி சென்றபோது, தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசிய கன்டெய்னர் லாரி தீப்பிடித்தது. அப்போது, லாரியின் பின்னால் பைக்கில் வந்த வாலிபர்கள் அதை பார்த்து, டிரைவரை உஷார் படுத்தினர். தமிழ் தெரியாத அவரால் வாலிபர்கள் கூறி-யதை அறிய முடியாமல், லாரியை நிறுத்தாமல் ஓட்டி, கெலமங்-கலம் - ஓசூர் சாலைக்கு வந்தார். கெலமங்கலத்தை தாண்டி, பைர-மங்கலம் பிரிவு சாலை அருகே மதியம், 2:00 மணிக்கு வந்த-போது, லாரியின் பின்பகுதியில் தீப்பிடித்ததை உணர்ந்தார். உடன-டியாக லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு, கீழே குதித்து உயிர் தப்பினார். தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் தீயணைப்புத்துறையினர் வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், கன்டெய்னர் லாரிக்குள் இருந்த, 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 40 மொபட்டுகள் மற்றும் லாரி எரிந்து நாசமானது. கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, உதவி மாவட்ட அலு-வலர் கருணாகரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்-டனர். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.