உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பலாத்காரம் நடந்த பள்ளியில் மாணவர்களுக்கு கவுன்சிலிங்

பலாத்காரம் நடந்த பள்ளியில் மாணவர்களுக்கு கவுன்சிலிங்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், போச்சம்பள்ளி அருகே செயல்படும் அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவி, கடந்த, 5ல், பள்ளி ஆசிரியர்கள், 3 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் பெரிய அதிர்ச்-சியை ஏற்படுத்தியது.சம்பந்தப்பட்ட, 3 ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்-கவும், மாணவிக்கு உரிய இழப்பீடு வழங்கி அவரின் வாழ்வாதா-ரத்தை உறுதிப்படுத்த கோரியும், சாலை மறியல், பள்ளி புறக்க-ணிப்பு போன்ற நிகழ்வுகள் அரங்கேறின.இதையடுத்து, 3 ஆசிரியர்களும் கைதான நிலையில் கடந்த, 6ல் கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, மாவட்ட கலெக்டர் நேரில் விசாரணை நடத்த வேண்-டுமென வைத்த கோரிக்கையை ஏற்று, கடந்த, 7 சனிக்கிழமை-யன்று பெற்றோர் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட, 25 பேர், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தினேஷ்கு-மாரை சந்தித்து மனு அளித்தனர்.அதை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார். இதையடுத்து நேற்று, பள்ளி வழக்கம் போல் செயல்-பட்டது. பள்ளியில், 140 மாணவியர் படித்து வந்த நிலையில் நேற்று, 60 மாணவ, மாணவியர் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்-தனர்.அவர்களுக்கு உளவியல், ரீதியிலான கவுன்சிலிங் அளிக்கப்பட்-டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை