உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேவி கருமாரியம்மன் கோவில் வருஷாபிேஷகம்

தேவி கருமாரியம்மன் கோவில் வருஷாபிேஷகம்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை சாலையோரம், பாரதியார் நகர் பகுதியில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆறாம் ஆண்டு வருஷாபி ேஷக விழா நேற்று நடந்தது. காலை, 7:30 மணிக்கு கணபதி ஹோமம், துர்கா ஹோமம், நவக்கிரக ஹோமம், 9:00 மணிக்கு சங்காபிேஷகம், கலசாபிேஷகம் நடந்தது. 10:30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், முன்னாள் நகராட்சி தலைவர் குருசாமி, கவுன்சிலர் தில்ஷாத் முஜிபூர் ரஹ்மான் உட்பட நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி நிர்வாகிகள் மூர்த்தி, நவீன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ