உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குழந்தைகள் திரைப்பட விழா

குழந்தைகள் திரைப்பட விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகள் திரைப்பட விழா நேற்று (ஆக.,5) துவங்கி வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகள் திரைப்பட விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குழந்தைகள் திரைப்பட விழா கலெக்டரின் நேர் முக உதவியாளர் (பொது) ஜீவரத்தினம் தலைமையில் கிருஷ்ணகிரி சாந்தி தியேட்டரில் நடந்தது. கலெக்டர் (பொ) பிரகாசம் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் மார்ஸ், திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் அஸ்மத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 'பிஞ்சு நெஞ்சங்களின் புதியதோர் உலகம்' என்ற குழந்தைகள் திரைப்படம் ஒளிபரப்பபட்டது. கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் திரைப்படத்தை கண்டு களித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 தியேட்டர்களில் இந்த திரைப்படம் ஒளிபரப்பபடுகிறது. 75 நிமிடங்கள் ஓடும் திரைபடத்தில் நடிகர்கள் யாரும் இல்லாமல் குழந்தைகளை மட்டுமே வைத்து படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் பாத்திரத்தையும் குழந்தைகளே வேடமிட்டு நடித்துள்ளனர். பி.டி.ஏ., தலைவர் வெங்கடாசலம், துணை தலைவர் நெடுஞ்செழியன், செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆன்நதகுமார், சாந்தி தியேட்டர் மேலாளர் பிரபாகரன், மாநில குழந்தைகள் திரைப்பட அமைப்பாளர் தேவராஜன், ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி