உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிணறுக‍ளை குப்பை போட்டு மூடியதால் கட்டிகானப்பள்ளி பஞ்.,ல் குடிநீர் பிரச்னை

கிணறுக‍ளை குப்பை போட்டு மூடியதால் கட்டிகானப்பள்ளி பஞ்.,ல் குடிநீர் பிரச்னை

கிருஷ்ணகிரி, கிணறுகளில் குப்பை போட்டு மூடியதால், கட்டிகானப்பள்ளி பஞ்.,ல், குடிநீர் பிரச்னை எழுந்துள்ளது.கிருஷ்ணகிரி அருகே கட்டிகானப்பள்ளி பஞ்., புதிய வீட்டுவசதி வாரியம் பகுதி-2ல், தற்போது, 1,780 வீடுகள் உள்ளன. இங்கு, 5,000 லிட்டர் மட்டுமே ஒகேனக்கல் குடிநீர் கிடைக்கிறது. இதனால், 4 ஆழ்துளை கிணறு அமைத்து, அதிலிருந்து நீரை எடுத்து, அங்குள்ள கிணற்றில் சேமித்து, மோட்டார் மூலம், நேரடியாக குடிநீரை வழங்குகின்றனர். இப்பகுதியில் கடந்த, 5 ஆண்டுகளாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.இப்பகுதி விவசாயத்திற்காக கடந்த, 80 ஆண்டுகளுக்கு முன், 50 அடி ஆழத்தில், 50 அடி அகலத்தில், 13 கிணறுகள் அமைத்திருந்தனர். காலப்போக்கில் குடியிருப்பு பகுதியாக மாற்றப்பட்ட பிறகு இந்த கிணற்றில் மின்மோட்டார் அமைத்து, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.இது குறித்து அப்பகுதியை சேர்ந்த புருஷோத்தமன், 42, கூறுகையில், ''இப்பகுதிக்கு ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் இல்லை. ஆழ்துளை கிணற்றில் இருந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்கின்றனர். இது குறித்து பஞ்., அலுவலகத்தில் புகார் தெரிவித்தால், ஆழ்துளை கிணறு போதுமானதாக இல்லை. நீங்கள், நீரை விலை கொடுத்து வாங்கிக்கொள்ள கூறுகின்றனர். இப்பகுதில், 50 சதவீதத்திற்கும் மேல், அரசு அலுவலர்கள் குடியிருந்து வருகின்றனர்,'' என்றார்.ஓய்வுபெற்ற டேங்க் ஆப்பரேட்டர் ராஜேந்திரன், 76, கூறியதாவது: இப்பகுதியில் இருந்த, 13 கிணறுகளில், மக்கள் குப்பை கொட்டி மூடியதால், 9 கிணறுகள் காணாமல் போன நிலையில், மேலும், இரண்டு கிணற்றில் தற்போது குப்பை கொட்டி வருகின்றனர். குடிநீர் வினியோகம் செய்து வந்த, அங்குள்ள மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலக வளாகத்திலுள்ள கிணற்றில், கழிவுநீரை விட்டதால், அந்த நீரை பயன்படுத்த முடியாமல் உள்ளதோடு, ஆழ்துளை கிணற்றில் உள்ள தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை