உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டையில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை

ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டையில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை

கிருஷ்ணகிரி: தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மற்றும் சிங்காரப்பேட்டை பகுதிகளில்இன்று (14ம் தேதி) 'ட்ரோன்'கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (14ம் தேதி),கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பயணம் மேற்கொள்ள உள்ளார். இதை முன்னிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை காக்கும் வகையில், ஊத்தங்கரை மற்றும் சிங்காரப்பேட்டை போலீஸ் எல்லைகளுக்கு, உட்பட்ட பகுதிகளில், முதல்வர் வருகை தரும் இடங்களிலும், அவர் பயணம் மேற்கொள்ளும் பாதைகள் சுற்றுவட்டாரத்தில், 2கி.மீ., வரையிலான பகுதிகளில் சிவில், 'ட்ரோன்'கள் இயக்குவது முற்றிலும் தடைசெய்யப்படுகிறது. இந்த அறிவிப்பை மீறி, 'ட்ரோன்'களை இயக்கும் நபர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை