போதை ஆசாமி உயிரிழப்பு
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, பாளேதோட்டம் பிரிவு சாலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு குடிபோதையில், 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தபோது, அவர் இறந்து கிடந்தார்.போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்ததில், அவர் தர்மபுரி மாவட்டம், இருமத்துாரிலிருந்து போச்சம்பள்ளிக்கு வந்த பஸ் டிக்கெட் இருந்தது. மேலும் அவரது பாக்கெட்டில், 5,000 ரூபாய் இருந்தது. இறந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.