உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம்

விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில், வேளாண் துறை, அட்மா திட்டத்தில் வேப்பனஹள்ளி வேளாண் உதவி இயக்குனர் சிவநதி தலைமையில் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் வேளாண் அலுவலர் ஜோதி, இயந்திர நடவு முறையில் நெல் நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு, 4,000 ரூபாய் பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனத்தின் நன்மைகள் மற்றும் மானியத்திட்டங்கள் குறித்து பேசினார். உதவி வேளாண் அலுவலர் முருகேசன், வேளாண் துறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தார். உதவி தோட்டக்கலை அலுவலர் ராஜேந்திரன், தோட்டக்கலைத்துறையில் செயல்படுத்தப்படும் மானியத்திட்டங்கள் குறித்து கூறினார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி மருத்துவர் ராஜராஜன், கால்நடை பராமரிப்புத்துறையில் செயல்படுத்தப்படும் மானியத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை