தந்தை, மகன் கிணற்றில் சடலமாக மீட்பு
ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி ரயில் பாதை அருகிலுள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் மிதந்துள்ளன. சாமல்பட்டி போலீசார், ஊத்தங்கரை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்டம், நல்லுார் அடுத்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி, 37, அவரது மகன் கவின், 5, என, தெரியவந்தது. இருவரும், செங்கத்திலுள்ள தங்கள் உறவினர் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு நேற்று வீடு திரும்பிய போது, இருவரும் தற்கொலை செய்து கொண்டதும், பாலாஜி அதிக கடன் தொல்லையால் மனவிரக்தியில் இருந்ததும் தெரியவந்தது.